சப்ரகமுவ ஐ.தே.க.யின் முதலமைச்சர் வேட்பாளராக ஹேஷா எம்.பி.

276 0

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீங்கி சப்ரகமுவ மாகாணத்தின் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட தான் தீர்மானித்துள்ளதாக இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி. ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.

சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் வேட்பாளராக கட்சியின் மத்திய செயற்குழு தன்னை தெரிவு செய்தமையையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும், இந்த சவாலை வெற்றி கொள்ள தன்னை அர்ப்பணிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாஷிம் தனது பெயரை மத்திய செயற்குழுவில் பிரேரித்துள்ளதாகவும், தானே அதற்கு மிகவும் தகுதியானவன் என செயற்குழு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment