மனித உரிமை செயற்பாட்டாளர்களை தண்டிக்கும் நாடுகளில் இலங்கைக்கு14 ஆவது இடம்

256 0

மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்களை தண்டிக்கும் நாடுகள் பட்டியலில் 14 ஆவது இடம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்களை தண்டிக்கும் 21 நாடுகளின் பட்டியலை நேற்று (22) வெளியிட்டுள்ளது.

மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்களை தண்டிக்கும் நாடுகள் பட்டியலில் இலங்கை சேர்க்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இது தொடர்பிலான பட்டியலை உதவி ஆணையாளர் அண்ட்ரூ கில்மோ நேற்று மாலை வெளியிட்டுள்ளார்.  இந்தியாவுக்கும் இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment