பொரளை 3 மாடிக் கட்டிடத் தொகுதியில் தீ, உயிராபத்து இல்லை

269 0

கொழும்பு, பொரளை, சீவலிப் பகுதியிலுள்ள 3 மாடிக் கட்டிடத்தொகுதியின் முதல் மாடி இன்று (23) காலை 9.00 மணியளவில் திடீரென தீ பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் உயிர் ஆபத்துக்கள் எதுவும் ஏற்பட வில்லையென பொலிஸார் அறிவித்துள்ளனர்.

தீயணைப்பு படையினர்  மின்சார சபை பணியாளர்களின் உதவியோடு முதாலம் மாடியில் பரவிய தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தீ பரவலுக்கான காரணம் இது வரை கண்டறியப்பட வில்லையெனவும், பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a comment