கட்டுகஸ்தொட – மாத்தளை வீதியிலுள்ள கட்டுகஸ்தொட பொலிஸ் நிலையத்துக்கு அருகில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யானையொன்றை ஏற்றிச் சென்ற லொறியொன்று கெப் ரக வாகனத்துடனும் பஸ் ஒன்றுடனும் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்பட வில்லையென கூறப்படுகின்றது