போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் சாரதிகளை இனங்காணும் விசேட செயற்திட்டமொன்று இன்று தொடக்கம் எதிர்வரும் வாரங்களில் கொழும்பு நகரில் செயற்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வௌியிட்டு காவற்துறை தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது.
சிவில் உடையில் காவற்துறை அதிகாரிகள் கொழும்பின் பல்வெறு பகுதிகளுக்கு சாதாரண வாகனங்களின் பயணிக்கவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் , போக்குவரத்து விதி மீறல்களின் ஈடுபடும் சாரதிகள் கண்காணிக்கப்பட்ட , அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒழுக்கமான மற்றும் சட்டத்தை மதிக்கும் சாரதிகளை உருவாக்குதல் இந்த செயற்திட்டத்தின் குறிக்கோள் என காவற்துறை தலைமையகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.