சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் இன்றைய தினம் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.
சமூக மாற்றத்திற்காக போராடும் ஆண் பெண் சமத்துவக் குழுவினரால் யாழ்.நகர்ப் பகுதியில் இன்றைய தினம் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.
சமுக மாற்றத்திற்காக போராடும் ஆண் பெண் சமத்துவக் குழுவில் செயற்படும் அமைப்புக்கள் இணைந்து இந்த சிரமதான பணியை முன்னெடுத்திருந்தனர்.
இன்று காலை 8-30 மணி முதல் 10-30 மணிவரை முன்னெடுக்கப்பட்ட இந்த சிரமதான பணியில் யாழ்.நகரின் பேரூந்து நிலையத்திற்கு பின்புறமாகவுள்ள வீதியோரங்கள் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்து குறித்த அமைப்பின் பிரதிநிதி எஸ்.றஜனி, சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அனைவரதும் கடமை எனவும், எனவே பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு இன்றைய செயற்திட்டத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இன்றைய சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.