தங்கம் கடத்த முற்பட்ட பெண் கைது!

299 0

15 இலட்சத்து 72 ஆயிரத்து 550 ரூபாய் பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமாக இந்தியாவுக்கு கொண்டு செல்ல முற்பட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் கோயம்புத்தூர் நோக்கி செல்வதற்காக வந்த குறித்த பெண்ணிடம் இருந்து 314.5 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் , வத்தளை பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண்ணுக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Leave a comment