கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்ட வேண்டாம்

479 0

கொழும்பு குப்­பை­களை புத்­தளம் அரு­வக்­காடு பிர­தே­சத்தில் கொட்டும் திட்­டத்­திற்கு எதிர்ப்புத் தெரி­வித்து நேற்று வெள்­ளிக்­கி­ழமை ஜூம்ஆத் தொழு­கையின் பின்னர் புத்­தளம் கரைத்தீவு பிர­தே­சத்தில் மூவின மக்­களும் ஒன்று சேர்ந்து பாரிய எதிர்ப்பு ஆர்ப்­பாட்­ட­மொன்றில் ஈடு­பட்­டனர்.

புத்­தளம் கரைத்­தீவு மஸ்­ஜிதுன் நூர் ஜும்ஆப் பள்­ளி­வாயல், சேரக்­குளி சென்.பீற்றஸ் தேவா­லயம், எரிக்­க­லம்­வில்லு விகாரை ஆகி­ யன ஒன்­றி­ணைந்து குறித்த எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தை ஏற்­பாடு செய்­தி­ருந்­தனர்.

நேற்று வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆத் தொழு­கையின் பின்னர்  மஸ்­ஜிதுன் நூர் ஜும்ஆப் பள்­ளி­வா­ய­லுக்கு முன்­பாக ஒன்­று­௯­டிய கரைத்­தீவு முஸ்லிம் மக்கள் கொழும்பில் இருந்து குப்­பை­களை புகை­யி­ரதம் ஊடாக புத்­தளம் அரு­வக்­காடு பிர­தே­சத்தில் கொட்டும் திட்­டத்­திற்கு தமது கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டனர்.

”விஜயன் கால் பதித்த வர­லாற்று பூமியில் குப்பை கொட்­டு­வதா”, ”எமது கடல். வளங்­களை அழிக்கும் நச்சுப் பதார்த்­தங்கள் கலந்த கொழும்பு குப்­பை­களை எமது மண்ணில் கொட்­டு­வதா”,  எமது பூமியை குப்பை மேடாக்­கு­வதா” எனும் பல வாச­கங்கள் எழு­தப்­பட்ட சுலோ­கங்­களை ஏந்­தி­ய­வாறு எதிர்ப்புக் கோஷங்­களை எழுப்பிக்கொண்டு சேரக்­குளி சென்.பீற்றஸ் தேவா­லயம் வரை ஊர்­வ­ல­மா­கவும் சென்­றனர்.

இத­னை­ய­டுத்து, கரைத்­தீவு, சேரக்­குழி மற்றும் எரிக்­க­லம்­வில்லு ஆகிய பகு­தி­யி­லுள்ள முஸ்லிம், சிங்­களம் மற்றும் கிறிஸ்­தவ மக்கள்  சேரக்­குளி சென்.பீற்றஸ் தேவா­ல­யத்­திற்கு முன்னால் ஒன்று கூடி இன, மத, மொழி வேறு­பா­டு­க­ளுக்கு அப்பால் தமது எதிர்ப்­பினை தெரி­வித்­தனர்.

கொழும்பு குப்­பை­களை புத்­தளம் அருவக்­காடு பிர­தே­சத்தில் உள்ள பாரிய குழி­களில் கொட்டும் அரசின் திட்­டத்­தினால் அறு­வக்­காடு பிர­தே­சத்­திற்கு மிக பக்­கத்­தி­லுள்ள கிராம­மான கரைத்­தீவு கிராம மக்­களே பாதிப்­புக்­களை எதிர்­நோக்­க­வுள்­ள­தாக ஆர்ப்­பாட்­டத்தில் கலந்­து­கொண்ட மத தலை­வர்­களும் இங்கு உரை­யாற் றும் போது குறிப்­பிட்­டனர்.

எனவே, இந்த திட்­டத்­தினால் கடற்­றொ­ழி­லா­ளிகள், விவ­சா­யிகள் பாதிக்­கப்­ப­டு­வ­துடன், முழுச்சூழ­லுக்கும் அச்­சு­றுத்­த­லா­க வும் அமையும் என்பதாலும் இந்த திட்டத்தை மீள்பரிசீலனைக்கு உட்படுத்துமாறும் மூவின மத தலைவர்களும் ஜனாதிபதி. பிரதமர் மற்றும் சுற்றாடல் வள அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை முன் வைத்தனர்.

Leave a comment