வடமாகாணத்தில் முதலமைச்சர் விக் னேஸ்வரனின் நடவடிக்கைகள் தொடர்பில் கவலையடைகின்றேன். யாழ்ப்பாணத்தில் படையினரின் பாதுகாப்பு நடவடிக்கையை முதலமைச்சர் குறைத்து மதிப்பிடக்கூடாது என மெளபிம மக்கள் கட்சியின் தலைவரும் தென் மாகாண ஆளுநருமான ஹேமகுமார நாணயக்கார தெரிவித்தார்.
கட்சியினால் நேற்று கொழும்பில் நடத் திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
யாழ்ப்பாணத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் செயற்பாட்டை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறைத்து மதிப்பிடக்கூடாது. முதலமைச்சருக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் சுற்றி இருப்பதால் பிரச்சினை இல்லை.
ஆனால் வடக்கில் சாதாரண மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியிருப்பது பொலிஸாரும் இராணுவத்தினருமாகும்.
படையினரை வடக்கில் இருந்து வெளியேற்ற வேண்டும் என தெரிவித்துவந்த சிவாஜிலிங்கம், யாழ்ப்பாணத்தில் ஆவா குழு தலைதூக்கியபோது அவர்களை உடனடியாக கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். அப்போது அவர்களுக்கு இராணுவமும் பொலிஸா ரும் தேவையாகின்றது. மேலும் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனை நான் சிறுவயதில் இருந்து அறிவேன். எனது மூத்த சகோதரனின் உற்ற நண்ப ராக இருந்தார். அதனால் நான் அவரை அண்ணா என்றே அழைக்கின்றேன்.
முதலமைச்சரிடத்தில் முன்னைய காலத் தில் இருந்த நல்லிணக்கச் செயற்பாடுகளை இப்போது காண்பதில்லை. இனவாத செயற்பாடே அவரிடம் இப்போது இருந்து வருகின்றது. அவரின் இந்த நிலை குறித்து நான் கவலையடைகின்றேன். முதலமைச்சர் அண்மையில் மாநாயக்க தேரர்களை சந்தித்து உரையாடியுள்ளார். இதன்போது வடக்கிற்கு சமஷ்டி முறையிலான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிவித்துள் ளார். ஆனால் மாநாயக்க தேரர், நீங்கள் தெரிவிக்கும் சமஷ்டி முறைக்கு செல்வது கடினம் என தெரிவித்துள்ளார்.
எனவே வடமாகாண முதலமைச்சரின் இனவாத நடவடிக்கைகள் இனங்களுக்கு மத்தியில் மீண்டும் பிரச்சினையை ஏற்படுத்துவதாக இருக்கின்றன. அவர் அரசியலுக்காக இவ்வாறு நடந்துகொள்வதையிட்டு கவ லையடைகின்றேன். முதலமைச்சர் ஆரம்ப காலத்தில் இன நல்லிணக்கத்துக்காக பாடு பட்டவர். ஆனால் தற்போது அந்த செயற் பாடுகள் எதனையும் அவரிடம் காண முடிவதில்லை என்றார்.