இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் இலங்கை இராணுவ பதவி நிலை அதிகாரி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவை சந்தித்து கலந்துரையாடினர்.
பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு படையினர்களுக்கான நான்காவது தடவை இடம்பெறும் பேச்சுவார்த்தை தொடர்பில் இராணுவ தலைமையகத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றது.
பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ஹபீஸ் உர் ரஹ்மான, பிரிகேடியர் சையத் இம்ரான் அக்தர், கேணல் சஜாட் அலி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு பாதுகாப்பு தொடர்பான முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.
பாகிஸ்தான் இராணுவ உயர்மட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இலங்கை இராணுவத்தின் சமிக்ஞை அதிகாரி மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க தலைமையில் இடம்பெறும். இந்த பேச்சுவார்த்தையின் போது கூட்டு பயிற்சிகள், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மற்றும் பல்வேறு இராணுவ பரிமாற்ற திட்டங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.