முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தினுள் நுழைய முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் மாதம் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கொழும்பு முதன்மை நீதவான் லால் ரணசிங்க முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்னாள் ஜனாதிபதியை சந்திப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருமாறு சந்தேகநபர் கோரியிருந்த நிலையில் , அதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை.
பின்னர் , தன்னிடம் இருந்து கூரிய ஆயுதத்தை கொண்டு , தற்கொலை செய்துக் கொள்வதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே , குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.