புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான வழி­காட்­டல் குழு­வின் இடைக்­கால அறிக்கை

742 0

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான வழி­காட்­டல் குழு­வின் இடைக்­கால அறிக்கை நேற்று(21) வெளி­யா­னது. தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ ம­சிங்க அதனை நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைத்­தார்.

இலங்கை பிரிக்­கப்­ப­டாத, பிரிக்­கப்­ப­ட­ மு­டி­யாத நாடு என்று அந்த அறிக்கை குறிப்­பி­டு­கி­றது. பௌத்­தத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­ட­வேண்­டும் என்று பரிந்­து­ரைக்­கி­றது.

வடக்கு –கிழக்கு மாகா­ணங்­களை இணைப்­பது தொடர்­பில் மூன்று தெரி­வு­களை முன்­வைத்து இணக்­க­மின்­மையை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. தேசி­யம், மாகா­ணம், உள்­ளூ­ர­தி­கார சபை ஆகிய மூன்று மட்­டங்­க­ளில் அதி­கா­ரங்­க­ளைப் பகிர்­வ­தற்கு முன்­மொ­ழிந்­துள்­ளது.

காணிப் பயன்­பாட்டு அதி­கா­ரத்தை மாகா­ணங்­க­ளுக்கு வழங்க யோசனை முன்­வைத்­துள் ளது. பகி­ரப்­பட்ட அதி­கா­ரங்­க­ளைத் திரும்­பப் பெறு­வ­தற்கு மத்­திய அர­சுக்­குக் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கும் யோச­னை­க­ளும் வைக்­கப்­பட்­டுள்­ளன. மாகா­ணப் பிர­தி­நி­தி­ க­ளைக் கொண்ட இரண்­டா­வது சபை ஒன்றை நிறு­வ­வும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. நாட்டை வழிப்­ப­டுத்த அர­ச­மைப்­புப் பேரவை ஒன்றை அமைப்­ப­தற்­கான முன்­மொ­ழி­யும் உள்­ளது. பெண்­க­ளுக்கு 50 வீத இட­ஒ­துக்­கீடு வழங்­கப்­ப­டு­வ­தற்கு வகை செய்­யப்­ப­ட­வேண்­டும் என்­றும் கூறப்­பட்­டுள் ளது.

இணக்­க­மில்லை 
புதிய அர­ச­மைப்­புக்­கான வழி­ந­டத்­தல் குழு­வின் உறுப்­பி­னர்­கள் இடையே இந்த இடைக்­கால அறிக்கை தொடர்­பில் இணக்­கம் ஏற்­ப­ட­வே­யில்லை. அவர்­க­ளின் கருத்­துக்­கள் மட்­டுமே இடைக்­கால அறிக்­கை­யா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.
அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள பல விட­யங்­க­ளு­ட­னும் ஒவ்­வொரு கட்­சி­யும் இணக்­க­மின்­மையை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன. அவற்றை தத்­த­மது தனிப்­பட்ட அறிக்­கை­க­ளில் பின்­னி­ணைப்­பா­கச் சேர்த்­துள்­ளன.

பின்­னி­ணைப்­பு­க­ளைச் சேர்த்­துப் பார்க்­கும்­போது இடைக்­கால அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்ள சிறப்­பான விட­யங்­கள் எவை­யுமே இணக்­கம் காணப்­ப­டா­தவை என்­பது தெளி­வா­கின்­றது.

116 பக்க அறிக்கை

அறிக்கை 116 பக்­கங்­க­ளைக் கொண்­டி­ருக்­கி­றது. அதில் 44 பக்­கங்­கள் மட்­டுமே வழி­காட்­டல் குழு­வால் தயா­ரிக்­கப்­பட்­டவை. மிகுதி 70 பக்­கங்­க­ளும் கட்­சி­க­ளின் இணைப்­பு­க­ளால் நிரப்­பப்­பட்­டுள்­ளன. இத­னை­யும் உள்­ள­டக்­கிய 12 பகு­தி­க­ளாக அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய அர­ச­மைப்பு எப்­ப­டிப்­பட்ட அடிப்­ப­டை­க­ளு­டன் உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டும் என்­ப­தற்­கான வரை­ய­றையை இந்த அறிக்கை கட்­ட­மைத்­துள்­ளது.  இலங்கை ஒற்­றை­யாட்சி நாடாக இருக்க முடி­யாது என்று அது தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளது. அதற்­குப் பதி­லாக சிங்­க­ளத்­தில் ஏகிய ராஜ்­ஜிய என்­ப­தும் தமி­ழில் ஒரு­மித்த நாடு என்­ப­தும் பயன்­ப­டுத்­த­ப­டும் பதங்­க­ளாக இருக்­கும்.

அதன் பொருள் பிரிக்­கப்­ப­டாத, பிரிக்­கப்­ப­ட­மு­டி­யாத நாடு என்­ப­தா­கும் என்­றும் தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அதி­கா­ரப் பகிர்வு

அதி­கா­ரப் பகிர்வு தொடர்­பில் சாத­க­மான நிலைப்­பா­டு­கள் காணப்­பட்­டா­லும், தமிழ் மக்­க­ளின் எதிர்­பார்க்­கைக்­கு­ரிய வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளின் இணைப்பு இந்த அறிக்­கை­யில் இல்லை.

ஆனால், அது பற்றி வழி­காட்­டல் குழு தொடர்ந்து பரி­சீ­லிப்­ப­தற்கு அறிக்­கை­யில் இட­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது. வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளின் இணைப்­புத் தொடர்­பில் மூன்று தெரி­வு­களை அறிக்கை முன்­வைத்­துள்­ளது.

தற்­போ­துள்ள அர­ச­மைப்­பில் சொல்­லப்­பட்­டுள்­ள­மை­போன்ற மாகா­ணங்­களை இணைப்­பது குறித்த முடிவை அந்த மக்­க­ளி­ட­மி­ருந்தே பெறு­வது, அதா­வது இணைப்­புத் தொடர்­பில் மக்­கள் கருத்தை அறி­வது, மாகா­ணங்­களை இணைப்­ப­தற்­குப் புதிய அர­ச­மைப்­பில் இடம் வழங்­கக்­கூ­டாது, வடக்கு கிழக்கு மாகா­ணங்­களை இணைப்­பதை புதிய அர­ச­மைப்பு உறு­திப்­ப­டுத்­து­வது ஆகிய தெரி­வு­கள் ஆரா­யப்­பட்­டன என்று அறிக்கை கூறு­கின்­றது. ஆனால் அது பற்­றிய இறுதி முடிவு எது­வும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

அந்­தந்­தப் பகு­தி­க­ளில் உள்ள சிறு­பான்மை மக்­க­ளின் உரி­மை­கள் பாது­காக்­கப்­ப­டு­வதை அர­ச­மைப்பு உறுதி செய்­ய­வேண்­டும் என்று மக்­கள் பேர­வை­கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளன என்­கிற விட­யம் அறிக்­கை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளது.  அதே­நே­ரம், குடி­ய­ர­சின் ஆட்­புல எல்­லைக்­கும் அதன் இறை­மைக்­கும் தெளி­வான ஆபத்தை ஏற்­ப­டுத்­து­கின்ற ஆயு­தக் கல­வ­ரத்­தையோ அல்­லது கிளர்ச்­சி­யையோ ஊக்­கு­விக்­கின்ற அல்­லது அர­ச­மைப்பு மீதான ஒரு சர்­வ­தேச மீற­லில் ஈடு­ப­டு­கின்ற நிலை­மை­யொன்று மாகாண சபை­யால் தோன்­றும்­போது தலைமை அமைச்­ச­ரின் ஆலோ­ச­னை­யின் பேரில் அரச தலை­வ­ரின் அறி­விப்பு ஒன்­றின் மூலம் மாகாண நிர்­வா­கத்­தின் அதி­கா­ரங்­களை அரச தலை­வர் பொறுப்­பேற்­க­லாம் என்­றும் கூறப்­பட்­டுள்­ளது. அது மட்­டு­மல்­லாது, அவ­சி­ய­மா­கும் பட்­சத்­தில் மாகாண சபை­யைக் கலைக்­க­லாம் என்­றும் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளது.

பௌத்­தத்­துக்கு முன்­னு­ரிமை

இடைக்­கால அறிக்­கை­யில் பௌத்த மத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­பட்­டுள்­ளது. ஏனைய மதங்­கள் சம­மாக மதிக்­கப்­ப­டும் என்று கூறப்­பட்­டி­ருந்­தா­லும் பௌத்­தத்­தைப் பாது­காப்­ப­தும் பேணு­வ­தும் அர­சின் கடமை என்று சொல்­லப்­பட்­டுள்­ளது. ஏனைய மதங்­க­ளின் விட­யத்­தில் இவ்­வாறு கூறப்­ப­ட­வில்லை.

தேசி­யம், மாகா­ணம், உள்­ளு­ராட்சி ஆகிய மூன்று மட்­டங்­க­ளில் அதி­கா­ரங்­கள் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டும் என்று இடைக்­கால அறிக்கை கூறு­கின்­றது.

அது எப்­ப­டிப்­பட்ட விதத்­தில் அமைந்­தி­ருக்­கும் என்­ப­தை­யும் விளக்­கு­கி­றது. உள்­ளு­ராட்­சி­யைப் பொறுத்­த­வ­ரை­யில் மாந­க­ரம், பிர­தே­சம் ஆகிய இரு பகு­தி­கள் மட்­டுமே இருக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. நகர சபை­கள் தகுதி நீக்­கம் செய்­யப்­ப­டு­கின்­றன.

அதி­கா­ரங்­கள் தேசிய நிரல், மாகாண நிரல் என்­கிற அடிப்­ப­டை­யில் பகி­ரப்­ப­டும். ஒருங்­கியை நிரல் வேண்­டாம் என்று கூறி­னா­லும் சில­வற்றை ஒருங்­கியை நிர­லில் வைத்­துப் பரி­சீ­லிப்­ப­தற்­கான அனு­ம­தி­யை­யும் அறிக்கை வழங்­கி­யுள்­ளது.
மாகாண ஆளு­ந­ரின் அதி­கா­ரங்­கள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அவர் ஒரு நிகழ்­வு­க­ளுக்­கான தலை­வ­ராக மட்­டுமே இருப்­பார். பாது­காப்பு, பொரு­ளா­தார ஒருங்­கி­ணைப்பு, இறைமை, ஆள்­புல ஒருமை ஆகிய விட­யங்­கள் தேசிய நிர­லுக்­கு­ரி­யவை என்­றும் ஏனை­யவை மாகாண நிர­லுக்­கு­ரி­யவை என்­றும் வகுக்­கப்­பட்­டுள்­ளன.

ஆனால், தேசிய தரம் என்ற வகை­யில் ஏனைய விட­யங்­க­ளில் தேசிய அரசு தலை­யி­டு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. உதா­ர­ண­மா­கக் கல்வி, சுகா­தா­ரம் போன்­ற­வற்­றின் தேசிய தரத்தை தேசிய அரசே தீர்­மா­னிக்­கும். பிரி­வினை பற்­றிப் பேசவே கூடாது. எந்­த­வொரு கட்­டத்­தி­லும் பிரி­வினை தடுக்­கப்­ப­டு­கி­றது. பிரிந்து செல்­லு­தல் குறித்­துப் பேசவே முடி­யாது என்று இடைக்­கால அறிக்கை கூறு­கின்­றது.

எந்­த­வொரு மாகா­ணத்­தையோ பகு­தி­யையோ தனி­நா­டாக்­கு­வ­தற்­காக வாதா­டு­வதோ அதற்­காக நட­வ­டிக்கை எடுப்­பதோ செய்­யப்­ப­டக்­கூ­டா­தவை என்­கி­றது அறிக்கை.

அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்­றம் ஒன்று உரு­வாக்­கப்­ப­டும் என்று இடைக்­கால அறிக்கை கூறு­கின்­றது.
காணி­கள் அனைத்­தும் தேசிய அர­சுக்­கு­ரி­யவை எனி­னும் மாகா­ணங்­க­ளுக்கு உட்­பட்ட காணி­கள் அனைத்­தை­யும், தேசிய அர­சின் தேவைக்­கா­கக் குறித்­தொ­துக்­கப்­பட்­டவை தவிர அதா­வது நீர்ப் பயன்­பாடு போன்ற விட­யங்­க­ளில் தேவைக்­காக, பயன்­ப­டுத்­தும் உரிமை மாகா­ணங்­க­ளுக்­கு­ரி­யது.

அரச காணி­கள் தனி­யா­ருக்கு வழங்­கப்­ப­டும்­போது காணி­யற்ற நபர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டும்.  அதி­லும் முத­லில் அந்த மாவட்­டத்­தைச் சேர்ந்த குறிப்­பிட்ட உப பிரி­வு­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளுக்­கும், அடுத்து மாவட்­டத்­தில் உள்­ள­வர்­க­ளுக்­கும், அடுத்து மாகா­ணத்­தில் உள்­ள­வர்­க­ளுக்கு இறு­தி­யாக ஏனை­ய­வர்­க­ளுக்­கும் வழங்­கப்­ப­டும்.

காணி அதி­கா­ரம்

காணி விட­யத்­தில் மத்­திய மாகாண அர­சு­க­ளுக்கு இடை­யில் பிணக்கு ஏற்­பட்­டால் அத­னைத் தீர்ப்­ப­தற்கு நியாய சபை ஒன்ற அரச தலை­வ­ரால் அமைக்­கப்­ப­டும். அதில் மத்­திய அர­சின் தலைமை அமைச்­சர், மாகாண முதல் அமைச்­சர் ஆகி­யோ­ரின் பிர­தி­நி­தி­கள் நிய­மிக்­கப்­ப­டு­வர்.

தேசிய பாது­காப்­புக்­காக நியா­ய­மான கார­ணங்­க­ளைக் குறிப்­பிட்டு தலைமை அமைச்­ச­ரின் பரிந்­து­ரை­யின் பேரில் அரச தலை­வர் காணி­களை மத்­திய அர­சின் கட்­டுப்­பாட்­டின் கீழ் கொண்­டு­வ­ர­மு­டி­யும். தேசிய காணி ஆணைக்­குழு ஒன்று உரு­வாக்­கப்­ப­டும்.

பகி­ரப்­பட்ட அதி­கா­ரங்­கள் மாகாண சபை­க­ளி­டம் இருந்து ஒரு­த­லைப்­பட்­ச­மா­கத் திரும்­பப் பெறப்­ப­டா­மல் இருப்­பதை உறு­தி­செய்­வ­தற்­காக, அர­ச­மைப்பு ரீதி­யா­கப் போதிய காப்­பு­களை கடைப்­பி­டிக்­கா­மல் மத்­திய அரசு மாகாண சபை நிர­லில் உள்ள கரு­மங்­கள் மீதான சட்­ட­வாக்­கத்தை அத்­த­கைய சட்­ட­வாக்­கத்­து­டன் உடன்­ப­டாத மாகா­ண­சபை ஏதே­னும் தொடர்­பாக அமைக்­கக்­கூ­டாது என்­றும் அறிக்கை கூறு­கின்­றது.

இரண்­டா­வது சபை

பெரும்­பா­லும் மாகாண சபை­க­ளைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் இரண்­டா­வது சபை ஒன்றை உரு­வாக்­க­வும் அறிக்கை பரிந்­து­ரைக்­கி­றது. மாகா­ணங்­க­ளில் இருந்து 45 உறுப்­பி­னர்­க­ளை­யும் நாடா­ளு­மன்­றம் நிய­மிக்­கும் 10 உறுப்­பி­னர்­க­ளை­யும் உள்­ள­டக்­கிய 55 உறுப்­பி­னர்­களை அந்­தச் சபை கொண்­டி­ருக்­கும்.

சட்­ட­வாக்­கத்தை நிறுத்­தும் அதி­கா­ரம் இந்­தச் சபைக்­குக் கிடை­யாது என்­ற­போ­தும் அதனை நாடா­ளு­மன்­றத்­திற்­குத் திருப்பி அனுப்ப இந்­தச் சபை­யால் முடி­யும்.

அர­ச­மைப்­புத் திருத்­தங்­க­ளைச் செய்­ய­வேண்­டும் என்­றால் இரண்டு சபை­க­ளி­லும் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யைப் பெற­வேண்­டும். நேரடி மற்­றும் விகி­தா­சார முறை­களை உள்­ள­டக்­கிய கலப்­புத் தேர்­தல் முறை­மை­யொன்றே பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. நாடா­ளு­மன்­றம் 233 ஆச­னங்­க­ளைக் கொண்­டி­ருக்­கும்.

அதில் 140 ஆச­னங்­கள் நேரடி தேர்­தல் மூல­மும் 93 ஆச­னங்­கள் விகி­தார பிர­தி­நி­தித்­து­வம் மூல­மும் தெரிவு செய்­யப்­ப­டும். இடம்­பெ­யர்­வு­க­ளால் ஏற்­பட்­டுள்ள ஆள்­கு­றை­வைக் கணக்­கில் எடுத்து குறிக்­கப்­பட்ட காலத்­திற்கு வடக்கு மாகா­ணத்­திற்கு மேல­திக ஆச­னங்­கள் ஒதுக்­கப்­ப­ட­வேண்­டும்.

நிறை­வேற்று அரச தலை­வர் முறைமை நீக்­கப்­ப­ட­வேண்­டும், மாகா­ணங்­க­ளு­டன் தொடர்­பு­பட்ட அதி­கா­ரங்­கள் அரச தலை­வ­ருக்கு வழங்­கப்­ப­ட­வேண்­டும், அரச தலை­வரை நாடா­ளு­மன்­றமே நிய­மிக்க வேண்­டும் என்­கிற பரிந்­து­ரை­க­ளும் செய்­யப்­பட்­டுள்­ளன.

அர­ச­மைப்­புப் பேரவை

அர­ச­மைப்­புப் பேரவை ஒன்றை உரு­வாக்­க­வும் யோசனை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­க­ளின் உறுப்­பி­னர்­களை நிய­மிப்­பது மற்­றும் பொதுச் சேவை, நீதிச் சேவை­க­ளில் உள்ள உயர் பத­வி­க­ளுக்கு அதி­கா­ரி­களை நிய­மிப்­பது ஆகி­ய­வற்­றைச் செய்­வ­தற்­காக இந்­தப் பேரவை உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டும் எனக் கூறப்­பட்­டுள்­ளது.

50 வீதத்­திற்கு மேற்­பட்ட பெண்­கள் பிர­தி­நித்­து­வக் கொள்­கையை நடை­மு­றைப்­ப­டுத்­தும் தேவை­யைக் கருத்­தில்­கொண்டு ஏற்­பா­டு­க­ளைச் செய்­ய­வேண்­டும் என்­றும் கூறப்­பட்­டுள்­ளது.

எனி­னும் பின்­னி­ணைப்­பு­க­ளா­கக் கொடுக்­கப்­பட்­டுள்ள கட்­சி­க­ளின் அறிக்­கை­க­ளில் இந்த விட­யங்­க­ளில் பல­வற்­று­டன் ஒவ்­வொரு கட்­சி­யும் தமது உடன்­பா­டின்­மையை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன.

ஒவ்­வொரு கட்­சி­யும் சில விடங்­க­ளில் இணக்­கத்தை வெளிப்­ப­டுத்­திய போதும் முக்­கிய விட­யங்­க­ளில் இணக்­கம் எட்­டப்­ப­ட­வில்லை என்­பதை இணைப்­பு­கள் உறு­திப்­ப­டுத்­து­கின்­றன.

Leave a comment