நல்லூர் ஆலயத்தின் திருவிழாக் காலங்களில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுப்பதற்காக அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டள்ளது என்று யாழ்.பிராந்திய சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்துள்ளார்.500 ற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதே வேளை ஆலய சூழலில் 30 ற்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கமெராக்களும் பொருத்தப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தகவல் தந்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:- வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மகோட்சவம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இத் மகோட்சவத்தில் கலந்து வழிபாடுகளை மேற்கொள்வதற்காக ஏராளமானவர்கள் ஆலயத்தில் ஒன்று கூடுகின்றார்கள். இவர்களுக்கு தகுந்த பாதுகாப்பினை வழங்குவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். .நல்லூல் ஆலய திருவிழா நாட்களில் மக்களோடு மக்களாக இருந்து தங்கச் சங்கிலிகளை அபகிர்துச் செல்லும் நோக்கில் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த குடும்பத்தினல் தாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு வாடகை பணத்தினை செலுத்துவதற்கான திருட்டில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டள்ளது.
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களுடன் வந்திருந்த ஏனையவர்கள் தற்போது யாழ்ப்பாணத்தினை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர்.இருப்பினும் முக்கிய திருவிழாக்களின் போது அவர்கள் மீண்டும் வந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவார்கள் என்ற சந்தேகத்தில் அவர்களின் புகைப்படங்களையும், அவர்களுடைய தகவல்களையும் பொலிஸார் பெற்றுவைத்துள்ளார்கள். இவர்கள் திருட்டில் ஈடுபட்டால் உடனடியாக இணங்கண்டு அவர்களை கைது செய்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டள்ளது.
நல்லூர் ஆலயத்திற்கு வரும் அடியவர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு 500 ற்கும் மேற்பட்ட பொலிஸார் சிவில் உடைகளிலும், சீருடைகளுடனும் பாதுகாப்பு கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.மேலும் ஆலயத்திலும், அதனை அண்மித்த பகுதிகளிலும் நடைபெறும் செயற்பாடுகளை அவதாணிப்பதற்காக கண்காணிப்பு கமெராக்களும் பொருத்தப்பட்டள்ளது.குறிப்பாக ஆலையத்திற்கு உள்ளேயும், ஆலையத்திற்கு வெளியேறும், பிரதான நுழைவாயில்கள், அடியவர்கள் ஒன்றுகூடும் இடங்கள் போன்றவற்றில் சுமார் 30 ற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எனவே ஆலயத்திற்க வருகைதரும் அடியவர்கள் எந்தவிதமான குற்றச் செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என்றும் எஸ்.எஸ்.பி மேலும் கேட்டுக் கொண்டார்.