பேஸ்புக் வலைத்தளம் மூலம் நிதி மோசடி செய்த பெண் ஒருவர் வெலிகம பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வெலிகம பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வௌிநாட்டில் இருந்து பரிசுப் பொதி வந்துள்ளதாக பேஸ் புக் ஊடாக தகவல் தெரிவிக்கும் குறித்த பெண், வஞ்சகமான முறையில் தனது வங்கிக் கணக்கில் பணத்தை வைப்பிலிடும்படி கோரியுள்ளதாக, ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 64 வயதான ஒருவராகும். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இது போன்ற மோசடிகளில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என, பொது மக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.