கொம்பனித்தெரு பகுதியில் உள்ள மாடிக் கட்டடம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட அதிர்வின் காரணமாக குறித்த கட்டடத்திலிருந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இன்று ஏற்பட்ட குறித்த அதிர்வு தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸார் அனர்த்த மற்றும் கட்டட ஆராய்ச்சிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
அருகிலுள்ள பிரதேசத்தில் நடைபெறும் கட்டுமான பணியின் போது ஏற்படுத்தப்பட்ட அதிர்வின் காரணமாகவே குறித்த கட்டடம் அதிர்வுக்குள்ளாகியிருப்பதாக சம்பவம் தொடர்பில் ஆராய்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.