காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்வதற்கான செயலகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என பிரஜைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் பிரஜைகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அச்சுறுத்தல் காரணமாகவே அரசு இந்த செயலகத்தை அமைக்க பின்வாங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, தான் தலைவராக இருந்த இராணுவத்தின் சில பிரிவினர் மேற்கொண்ட போர் குற்ற நடவடிக்கைகள் காரணமாக ஏற்பட்டிருக்கும் அவதூறுகளை இல்லாமலாக்க வேண்டும் என சரத் பொன்சேகா கூறி வருவதாகவும் பிரஜைகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.