மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலத்தில் 40 % ஆக இருந்த விருப்பு வாக்கு முறைமை மற்றும் 60 % ஆக இருந்த தொகுதிவாரி தேர்வு முறைமை மாற்றப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
இன்று அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அதன்படி விருப்பு வாக்கு முறைமை – தொகுதிவாரி முறைமை என்பன 50-50 எனும் அடிப்படையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
ஒருசில கட்சிகளின் கோரிக்கைக்கு அமைய இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலம் நேற்று (20) பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.