போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

9559 0
10 ஆயித்து 100 ரூபா கனேடியன் டொலர் போலி நாணயத்தாள்களை மாற்ற முற்பட்ட இருவர்யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இருவர்  இன்று (21.09) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, யாழ்.நகரில் உள்ள சாரங்கன் மணி மாற்று நிலையத்திற்கு இளைஞர் ஒருவர் 10 ஆயிரத்து 100 ரூபா பெறுமதியான கனேடியன் டொலர் கள்ள நாணயங்களை மாற்றுவதற்கு கொண்டு சென்றுள்ளார்.
மணி மாற்று சேவை பிரிவில் உள்ள இளைஞரினால் கனேடியன் டொலர்கள் அனைத்தும் போலி  நாணயங்கள் என கண்டுபிடித்ததை தொடர்ந்து யாழ்.பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான புலனாய்வு பிரிவினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற புலனாய்வுப் பிரிவினர், நாணயம் மாற்றுவதற்கு வந்த இளைஞர் கைதுசெய்ததுடன், அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, சித்தன்கேணிப் பகுதியில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவர் போலி நாணயங்களை மாற்றிக்கொண்டு வருமாறு தந்ததாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, சித்தன்கேணிப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகரும் போலி நாணயங்களை மாற்ற வந்த நபரும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து யாழ்ப்பாணம் பொலிஸார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றதுடன், 10 ஆயிரத்து 10 ரூபா கனேடியன் டொலரும் இலங்கை ரூபாவின் மதிப்பின் பிரகாரம் 8 கோடி என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment