மாலபே அடே கனுவ பிரதேசத்தில் இரு டிப்பர் வண்டிகள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் ஒரு டிப்பர் வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய டிப்பர் வண்டியின் சாரதி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தின் காரணமாக அருகிலிருந்த கடைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது