ஜனாதிபதியின் பேண்தகு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தேசிய கரையோர மற்றும் கடல் வளங்களின் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு திருகோணமலை கடற்கரையில் துப்பரவு செய்யும் நிகழ்வு இன்று(21) இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இராணுவம், கடற்படை, பொலிஸ், ஊர்காவல் படை, பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், சுகாதார அதிகாரிகள், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அரச அதிகாரிகள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு துப்பரவு செய்யும் வேலையில் ஈடுபட்டனர்.
திருகோணமலையின் லிங்கநகர் பிரதான வீதியில் உள்ள கடற்கரை, துறைமுக கடற்கரை, கோட்டைக் கடற்கரையோரங்களில் உள்ள பிளாஸ்டிக், பொலித்தீன், குப்பைகள், போத்தல்கள் போன்றவற்றை அகற்றும் பணியில் முப்படையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர்.
400க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து இச்சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது