புற்று நோயாளர்களுக்கு வழங்கப்படும் வலி நிவாரணிகளை போதை மாத்திரைகளாக அறிமுகப்படுத்தி பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்ற நபர் ஒருவர் கிரான்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று மதியம் குறித்த நபர் கைது செய்யப்பட்ட வேளையில் அவரிடமிருந்து சுமார் 25,500 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் குறித்த போதை மாத்திரைகள் அடங்கிய பெட்டியுடன் வீட்டிலிருந்து வெளியே வரும் போது கொழும்பு மத்திய குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது