ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஒன்றிணைந்து ஒரே பட்டியலில் தேர்தலில் போட்டியிடுவாரகள் என தான் நம்பிக்கையுடன் கூறுவதாக துறைமுக மற்றும் கடற்படை நடவடிக்கைகள் பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.
இன்று காலியில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இந்த கருத்தினை தெரிவித்திருந்தார்.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பது S.W.R.D.பண்டாரநாயக்கவின் கட்சி என்றும் கூட்டு எதிர்கட்சி சுதந்திரக் கட்சியிலிருந்து உடைந்து சென்றுள்ளது எனவும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாங்கள் இருவரும் இணைந்து வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இரண்டு வேட்பாளர் பட்டியல் இல்லை எனவும் அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம மேலும் தெரிவித்துள்ளார்