இன்று காலை அம்பாறை ஒலுவில் கடலில் மீன்பிடிக்கச்சென்ற ஒருவர் படகு கவிழ்ந்ததன் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலுவில் 04ம் பிரிவை சேர்ந்த சம்சுதீன் பளீல் (44) என்பவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.