தற்போதைய அரசாங்கம் தந்திரமான முறையில் தேர்தலை பிற்போடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் தேர்தலை பிற்போடவில்லை என்றும், பெண்களின் அரசியல் பலத்தை பெருக்கவே தேர்தல் தாமதமாகின்றது என்றும் அவர் பரிகாசம் செய்துள்ளார்.
ஜனநாயக நாட்டில் வாக்குரிமை இல்லை என்றால் அது என்ன ஜனநாயகமா எனவும் மகிந்த கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறும் போது ஒரு பௌத்தன் என்ற வகையில் மனம் வெதும்புவதாகவும் மகிந்த குறிப்பிட்டுள்ளார்.