ட்ரம்பின் கருத்தானது நாய் குரைப்பதற்கு ஒப்பானது – வடகொரியா 

359 0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கருத்தானது தமக்கெதிராக நாய் குரைப்பதற்கு ஒப்பானது என வடகொரியா தெரிவித்துள்ளது.

நடைப்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் 72வது பொது சபை கூட்டம் தற்போது நடைப்பெற்று வருகிறது.

இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதற்கமைய இதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் கலந்து கொண்டார்.

இதன்போது டொனால்ட் ட்ரம்ப், பொது சபை கூட்டத்தில் உரையாற்றிய போது, தொடர்ந்து உலக நாடுகளின் எச்சரிக்கைகளை மீறும் வகையில் செயற்பட்டுவரும் வடகொரியாவை முழுமையாக அழித்து விடுவோம் என எச்சரிக்கை விடுத்தார்.

இது சபையில் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கு பதில் கருத்து வெளியிடும் போதே வடகொரிய வெளிவிவகார அமைச்சர் சுi லுழபெ-hழ இதனை தெரிவித்தார்.

அத்துடன் ஐக்கிய நாடுகள் சபை தமது நாட்டுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்துள்ளபோதிலும், அதனை தாம் பொருட்படுத்தாது அணு ஆயுத சோதனைகளில் ஈடுப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a comment