இன்னும் ஒரு வருடம் நிறைவடைவதற்கு முன்னர், மாகாண சபை தேர்தல்களை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜே.வி.பி கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து முன்னணியிள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இந்த கோரிக்கையை விடுத்தார்.
மாகாண சபை தேர்தல்களை ஒரே தடவையில் நடத்த எண்ணியுள்ளமை வரவேற்கத்தக்கது.
எனினும் அவற்றை உரிய காலப்பகுதியில் நடத்துவது கட்டாயமானதாகும் எனவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.