யாழ்ப்பாணம் கொலை -இருவருக்கு விளக்கமறியல்

285 0

யாழ்ப்பாணம் – நாவலர் வீதியில் தாய் மற்றும் மகன் தாக்கப்பட்டதுடன், தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கொலைச் சம்பவம் கடந்த 18ஆம் திகதி இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தந்தை, தாய் மற்றும் மகனை, அடையாளம் தெரியாத சிலர் தாக்கி, அவர்களை கோவில் ஒன்றுக்கு அருகாமையில் இட்டுச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், சிகிச்சை பலன் அளிக்காது, தந்தை பின்னர் உயிரிழந்தார்.

நாவலர் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேரே குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.

அதற்கமைய யாழ்ப்பாண காவல்துறையின் சிறப்பு குழுவொன்றினால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்;ட நிலையில் அவர்களை அடுத்தமாதம் 3ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்திரவிட்டுள்ளார்.

Leave a comment