கிண்ணியாவில் ஹெரோயினுடன் ஒருவர் கைது 

295 0

கிண்ணியா – இறால் குழி பாலத்திற்கருகில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த கைது நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

இதன்போது அவரிடம் இருந்த 120 மில்லி கிராம் ஹொரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர் முதூரை சேர்ந்த 34 வயதுடையவர், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Leave a comment