சாரதி அனுமதிப்பத்திரத்தில் உடல் உறுப்பு தானம் பற்றி குறிப்பிடப்படும்

380 0

rajitha-sena-696x391சாரதி அனுமதிப்பத்திரத்தில் உடல் உறுப்பு தானம் பற்றி குறிப்பிடப்படும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.எதிர்வரும் காலங்களில் சாரதி அனுமதிப்பத்திரங்களில் உடல் உறுப்பு தானம் செய்ய விரும்புகின்றாரா இல்லையா என்பது பற்றிய விபரங்களும் உள்ளடக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பிலான அமைச்சரவை பத்திரமொன்று விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.புதிதாக அறிமுகப்படுத்தப்படும் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டிருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

உடல் உறுப்பு தானம் செய்ய பலர் முன்வராமையினால் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.விபத்துக்களில் உயிரிழக்கும் சாரதிகளின் உடல் உறுப்புக்களை நோயாளர்களுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.