அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு நிறைவானதாக இல்லையெனில், அதனைப் புறக்கணிக்கவிருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக, அரசியலமைப்பின் தரத்தைக் குறைப்பதற்கு ஒருபோதும் தயாரில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எமது மக்களை விற்பதற்குத் தாம் தயாரில்லை என்பதை ஜனாதிபதியும் பிரதமரும் நன்கு அறிவார்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார்.