புறக்கோட்டை குமார வீதி பகுதியில் தீ பரவியுள்ள நிலையில் 16 வர்த்தக நிலையங்கள் சேதமடைந்துள்ளது.
நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் இவ்வாறு தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக நிலையம் ஒன்றில் பரவிய தீயினால் ஏனைய வர்த்தக நிலையங்களுக்கு தீ பரவியுள்ளதாக அறியவந்துள்ளது.
தீபரவலினை தொடர்பில் கொழும்பு நகர சபையின் தீயணைப்பு பிரிவு விரைந்து, தீயணைப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.
தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு 10 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீ பரவலுக்கான காரணங்கள் இதுவரையில் அறியப்படவில்லை.