8 நாட்களாக தொடர்ந்த மின்சார சேவையாளர்களின் சேவைப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று இரவுடன் நிறைவுக்கு வந்தது.
தமது கோரிக்கைகள் அடங்கிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டமையை அடுத்தே, குறித்த போராட்டம் கைவிடப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணியின் இணைப்பாளர் ரஞ்ஜன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
வேதனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து கடந்த 8 நாட்களாக மின்சார சபை சேவையாளர்கள் சேவைப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டு வந்தனர்.
இதனால் நாட்டின் பல பகுதிகளில் மின்சார விநியோகங்கள் இடைக்கிடையில் தடைப்பட்டது.
இந்தநிலையில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், இன்றிலிருந்து தமது பணிகளை சிறந்த முறையில் ஆற்றுமாறு மின்சக்திதுறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பணியாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.