காவற்துறையினர் மீது மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் விசாரணை

257 0
கிரிபாவ – பதலவெல பிரதேசத்தில் காவற்துறையினர் மீது மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் நிகவெரடிய பிரிவுக்கு பொறுப்பான காவற்துறை அதிகாரியின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நேற்று அந்த பிரசேத்தை முற்றுகையிட்டு சோதனை நடத்தச் சென்ற நிக்கவெரடிய பிரதேசத்தின் ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் ஒருவரை கைது செய்ய முயற்சித்த போது, அவர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
பின்னர் அவரும், அவருடைய புதல்வரும் இணைந்து காவற்துறையினரை தாக்கியுள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதன்போது காவற்துறை அலுவலர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது குறித்த நபரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர் கல்கமுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலில் இரண்டு காவற்துறையினர் காயமடைந்தனர்.

Leave a comment