வெளியுறவு கொள்கைகளை கையாளுவது யார் – நாமல் ராஜபக்ஸ

1025 0

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை உண்மையில் கையாள்பவர் யார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

தமது அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தி;ல் அவர் இந்தக் கேள்வியை முன்வைத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில், ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஏன் பங்கேற்கவில்லை என்றும் அவர் வினவியுள்ளார்.

கடந்த முறை இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி தலைமையிலான இலங்கை தூதுக்குழுவில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பங்கேற்றிருந்தார்.

எனினும், இம்முறை கூட்டத்தொடரில் இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சரான திலக் மாரப்பன பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment