மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என சட்டமா அதிபர் அறிவித்திருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற அமர்வின்போது கடுமையான வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில், கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே சபாநாயகர் இதனைத் தெரிவித்தார்.