யாழ்ப்பாணம் நாவலர் வீதி பிரதேசத்தில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட இந்த கொலை வெறி தாக்குதலில் உயிரிழந்த நபரின் மகன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
4 உந்துருளிகளில் வந்த 8 பேரால், நாவலர்வீதி சங்கிலியன் சிலைக்கு அருகில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நாவலர் பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.படுகாயமடைந்த மகனுக்கு வயது 18 ஆகும்.யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
மேலும் ,சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யபட்டுள்ள நிலையில் , மற்றைய சந்தேகநபர்களை தேடி காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.