லலித், அனுஷவுக்கு பிணை

299 0

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோருக்கு நிபந்தனை அடிப்படையில் பிணை வழங்கப்பட்டுள்ளது. 

இன்று குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

2015ம் ஆண்டு தொலைத் தொடர்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான 600 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி சில் துணிகளை விநியோகம் செய்த சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இருவருக்கும் மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Leave a comment