கடந்த சில மாதங்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 90 வீதத்தால் குறைந்துள்ளதாக சுகாதார,போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை நாட்டிலுள்ள அணைத்து வைத்தியசாலைகளிலும் 937 நோயாளர்கள் மாத்திரமே சிகிச்சை பெற்று வருவதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
டெங்கு நோயை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டமை தொடர்பில் உலக சுகாதார அமைப்பு இலங்கையை பாராட்டியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை டெங்கு நோய் ஒழிப்பு திட்டத்திற்கு மேலும் 700 உதவியாளர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் காலத்தில் நாட்டின் அணைது பகுதிகளையும் உள்ளடக்கியதாக 1000 உதவியாளர்கள் இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.