வரட்சி காரணமாக இலங்கையில் தற்கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கைகள் உயர்வடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பினை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகமொன்று இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு இறுதி முதல் இலங்கையில் வரட்சியான காலநிலை நிலவி வருவதனால் பல பகுதிகளில் விவசாய நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
கடந்த நாற்பது ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மிகவும் வரட்சியான காலநிலை இதுவெனத் தெரிவிக்கப்படுவதுடன் வரட்சி காரணமாக மக்களின் வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் நாட்டின் 17 மாவட்டங்களில் வரட்சி நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சில பகுதிகளில் பருவப்பெயர்ச்சி மழை பெய்தாலும், விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள போதியளவு நீர் வசதி கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது