தவறான முறையில் ஆவணங்களை தயாரித்த மூவர் மாபோலை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நடத்திய
சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட வேளையில் சந்தேக நபர்களிடமிருந்து தவறான முறையில் அச்சிடப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள், கல்வி சார் சான்றிதழ்கள் மற்றும் அவற்றை அச்சிட பயன்படுத்திய உபகரணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மருதானை,றாகமை பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு அவர்கள் இன்று வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.