அணு ஆயுதப் போரில் இருந்து உலகைக் காப்பாற்றியவர் மரணம்

518 0

அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் இடையிலான பெரும் அணு ஆயுத போரை நிறுத்தி உலக அரங்கில் பெரும் பாராட்டை பெற்ற ரஷியாவின் முன்னாள் ராணுவ அதிகாரி ஸ்டானிஸ்லாவ் பெட்ராவ் (வயது 77) மரணம் அடைந்தார்.

அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் இடையிலான பெரும் அணு ஆயுத போரை நிறுத்தி உலக அரங்கில் பெரும் பாராட்டை பெற்ற ரஷியாவின் முன்னாள் ராணுவ அதிகாரி ஸ்டானிஸ்லாவ் பெட்ராவ் (வயது 77) மரணம் அடைந்தார்.

சோவியத் ரஷ்யாவின் ராணுவ அதிகாரியாக பணியாற்றியவர் ஸ்டானிஸ்லாவ் பெட்ராவ். இவர் 1983-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம்தேதி ராணுவ தளத்தில் ரேடார்கள் கண்காணிக்கும் பணியில் பெட்ராவ் ஈடுபட்டிருந்தார். அப்போது அமெரிக்கா தொடர்ச்சியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசியது என ரேடார் தரவுகள் சிக்னல் கொடுத்து உள்ளது. அப்போது சிறிது நேரங்களில் ஆழமாக யோசித்து முக்கியமான முடிவினை சொந்தமாக எடுத்தார். கிடைக்கப்பெற்ற தகவல்கள் அனைத்தும் தவறானது என்ற அறிக்கையை விடுவித்தார்.

சோவியத் ரஷியாவும், அமெரிக்காவும் மிகவும் ஆக்ரோஷமான மோதல் போக்கு கொண்டிருந்த நிலையில் ஸ்டானிஸ்லாவ் பெட்ராவ் மட்டும் ரஷிய அதிகாரியிடம் அமெரிக்காவின் அணு ஆயுத ஏவுகணை வீச்சு தொடர்பாக தகவல் தெரிவித்து இருந்தால் பெரும் பதிலடி தாக்குதலை ரஷியாவும் தொடங்கியிருக்கும். அவர் தகவலை மறைத்ததால் இருநாடுகள் இடையிலான அணு ஆயுத போரானது ஏற்படாமல் முடிந்தது. ரோடார் செயல்பாட்டில் தொடர்பு என்ற அவருடைய அறிக்கையானது பெரும் போரை நிறுத்தியது என அவருடைய செயலுக்கு உலகம் முழுவதும் பாராட்டு குவிந்தது.

அவர் தன்னுடைய நடவடிக்கையை யாரிடமும் தெரிவிக்கவில்லை. 1984-ம் ஆண்டு ராணுவத்தில் இருந்து வெளியேறி, மாஸ்கோவின் புறநகர் பகுதியில் வசிக்க தொடங்கினார். சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு அவருடைய செயல் உலக அரங்கிற்கு தெரியவந்ததும் பல்வேறு பாராட்டு கடிதம் அவருடைய வீட்டை நிறைய செய்தது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து அவருக்கு அதிகமான கடிதங்கள் வந்தது என அவருடைய மகன் பீட்ரோவ் கூறி உள்ளார்.

ஸ்டானிஸ்லாவ் பெட்ராவ் பணியை மையமாக வைத்து உலகைக் காப்பாற்றிய மனிதர் என்ற தலைப்பில் ஆவணப்படம் வெளியானது. ஸ்டானிஸ்லாவ் பெட்ராவ் தன்னுடைய பாராட்டத்தக்க பணிக்காக பல்வேறு சர்வதேச விருதுகளை வாங்கி உள்ளார். ஐ.நா.விலும் பாராட்டப்பட்டவர், கவுரவிக்கப்பட்டவர்.

இந்நிலையில் மாஸ்கோவின் புறநகர் பகுதியில் தன்னுடைய உறவினர்களுடன் வசித்து வந்த ஸ்டானிஸ்லாவ் பெட்ராவ், கடந்த மே மாதம் 19-ம் தேதி மரணம் அடைந்தார். அவருடைய மரண செய்தியானது ரஷியா மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் சில மாதங்கள் கழித்து இன்று தலைப்பு செய்தியாகி உள்ளது. அவருடைய ஜெர்மனி நண்பர் இதுதொடர்பாக பிளாக்கில் எழுதியதை அடுத்து அவரது மரண செய்தி வெளி உலகத்திற்கு தெரியவந்து உள்ளது.

Leave a comment