நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை மூடக்கோரிய வழக்கு

360 0

201608180820193908_Sale-of-Liquor-on-Highways-SC-Notice-to-Centre-States_SECVPFநாடு முழுவதும் நெடுஞ்சாலையோரம் உள்ள மதுக்கடைகளை மூடக்கோரும் வழக்கில், 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.ஆந்திர மாநிலம் நகரியைச் சேர்ந்த இ.வி.பாலகிருஷ்ணன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ‘இந்தியா முழுவதும் நெடுஞ்சாலையோரம் உள்ள மதுக்கடைகளால் சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் காயம் அடைபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. எனவே, சாலை விபத்துகளுக்கு காரணமாக இருக்கும் நெடுஞ்சாலையோர மதுக் கடைகள் அனைத்தையும் இந்தியா முழுவதும் அகற்ற உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி டி.எஸ்.தாகுர், ஏ.எம்.கன்வில்கர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் கிரண் ஷோரி மற்றும் வக்கீல் ராம்பாபு ஆகியோர் ஆஜராகி, நெடுஞ்சாலையோரம் உள்ள மதுக்கடைகளால் இந்தியா முழுவதும் கோரமான விபத்துகள் ஏற்படுகின்றன. கணக்கற்ற உயிர்கள் பலியாகின்றன. பலரும் உடல் உறுப்புகளை இழந்து அல்லல்படுகின்றனர். எனவே நெடுஞ்சாலையோரம் உள்ள மதுக்கடைகளை உடனடியாக மூட உத்தரவிட வேண்டும்’ என்று வாதாடினார்கள்.

இதனைத் தொடர்ந்து இந்த மனுவின் மீதான பதிலை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்தியாவில் சாலை விபத்துகள் தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள மற்றொரு வழக்குடன் இந்த மனுவை இணைத்து விசாரிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.