வழக்கு பிழையானது – சென்னை மேல் நீதிமன்றம்

338 0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக தமிழ்நாட்டின் மெரீனா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியமைக்காக கைதான மே 17 இயக்கத்தினர் மீதான வழக்கு பிழையானது என்று சென்னை மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் மெரீனாவில் இடம்பெற்ற இந்த நிகழ்வின்போதுஇ காவற்துறை உத்தரவை மீறியதாக தெரிவித்துஇ மே 17 இயக்கத்தின் நிறுவுனர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் கைதாகினர்.

அவர்களுக்கு எதிராக இந்தியாவின் குண்டாஸ் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

எனினும் அவர்கள் நடத்திய நிகழ்வானது மக்களை குழப்பும் வகையில் இருக்கவில்லை என்றும்இ அதனை குண்டாஸ் சட்டத்தின் கீழ் அடக்க வேண்டியதில்லை என்றும் சென்னை மேல் நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது.

 

Leave a comment