தமிழ் மொழி மூலமான தெரிவுகள் புறக்கணிப்பு

332 0

கல்வித் துறைச் சார்ந்த நிர்வாக ரீதியிலான அதிகாரிகளின் தெரிவுகளின் போது, தமிழ் மொழி மூலமான தெரிவுகள் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா ,ந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதேநேரம் சகல முச்சக்கர வண்டிகளுக்கும் மீற்றர் கருவி பொருத்தப்படுவதால், தாம் செல்லும் தூரத்துக்கான சரியான கட்டணத்தை மாத்திரமே பொதுமக்களுக்கு செலுத்த வேண்டிய வாய்ப்பு ,ருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ,தனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான மீற்றர் கருவிகளை மானிய அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் உரையாற்றும் போது, விபத்துக்களை குறைப்பதற்காக அபராதத்தொகையை அதிகரிக்கும் போதே, அதிகளவிலான குற்றங்கள் ,டம்பெறுவதாக சுட்டிக்காட்டினார்.

தேவேளை கிண்ணியாவில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து தரிப்பிடம் உடனடியாக திறக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் கோரியுள்ளார்.

சுயமாக சிந்தித்து சரியான விதத்தில் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதன் மூலமே விபத்துக்களை தவிர்க்க முடியும் என்று பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்தகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment