தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

313 0

201608180833464445_DMK-MLAs-suspension-need-to-reconsider-Vaiko-Interview_SECVPFதி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது வைகோ கூறினார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று மாலை மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சியின் போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றினார்கள். தற்போது அ.தி.மு.க. ஆட்சியின் போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றி வருகின்றனர். அ.தி.மு.க-தி.மு.க. ஆட்சி காலத்தில் மாறி, மாறி இப்படி செய்கின்றனர். இது சட்டசபைக்கு கவுரவம் அளிக்காது.

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் ஜனநாயக கடமை ஆற்ற சபாநாயகர் அனுமதி அளிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மேனகா காந்திக்கு அடிப்படை புரிதல் எதுவும் தெரியாது. மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவதுதான் சரியான கருத்து. ஜல்லிக்கட்டு காளைகளை யாரும் துன்புறுத்துவது கிடையாது. அதை குழந்தைகள் போல் பாதுகாக்கின்றனர். அந்த மாடுகளுக்கு சிறு உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் இளைஞர்களுக்குத்தான் காயம் ஏற்படும். மாடுகளுக்கு எந்தவித சிறு காயமும் ஏற்படாது. இதை மேனகா காந்தி புரிந்துகொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.