நாளாந்தம் மக்கள் உணவுக்கு எடுத்து கொள்ளும் உணவுகளில் குறிப்பிடதக்க அளவு ஈயம் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வுகளை மேற்கொண்ட சிறப்பு மருத்துவர் டீ.பீ ஆனந்த ஜயலால் தெரிவித்துள்ளார்.
அரிசி மற்றும் மரக்கறிகளில் அதிகளவு ஈயம் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈயத்துக்கு மேலதிகமாக வேறு பொருட்களான கெட்மியம் மற்றும் ஆசனிக் போன்ற இரசாயனப் பொருட்கள் குறித்து சோதனைக்குட்படுத்தப்பட்டது.
ஈயம் எனப்படும் இரசாயனத்தை அனைத்து வகை உணவுகளிலும் காணக்கூடியதாக இருந்தது.
அரிசி ஒரு கிலோகிராமுக்கு 232 மைக்ரோ கிராம் என்ற அளவில் ஈயம் காணப்படுகிறது.
மரக்கரியில் 201, குரக்கனில் 262 மற்றும் பழ வகைளில் 133 மற்றும் மீன்களில் 67 என்ற அளவிலும் காணப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்த இரசாயனங்கள் உணவில் இந்தளவில் உள்ளதா என்பதை தம்மால் நம்பிக்கைகொள்ள முடியவில்லை என அந்த மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
இவை மனிதர்களின் உடலில் சேர்ந்துள்ளதா என்பது தொடர்பில் முதியவர் ஒருவரிடமும், சிறுவர் ஒருவரிடமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதற்கமைய, ஈயமானது இரத்ததில் 47 வீதமளவில் கலந்துள்ளமை ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இவ்வாறான நிலையில், உணவு முறைமை குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
மூன்று வேளையும் சோறு உண்பதானது மிகவும் நல்லதல்ல என அவர் ஆலோசனை கூறியுள்ளார்.
அத்துடன், இந்தத் தரவுகளின் அடிப்படையில் ஒப்பிடுகையில் சைவ உணவு கட்டுப்பாட்டு என்பது சிறந்ததல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே, இறைச்சி மற்றும் மீன் வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வதை அதிகரிப்பது நல்லது என்றும் அந்த மருத்துவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.