ஜல்லிக்கட்டு நடத்த புதிய சட்டம் கொண்டு வர வேண்டும்- அன்புமணி

329 0

201608180905062406_Anbumani-Ramadoss-interview-will-need-to-bring-new_SECVPFஜல்லிக்கட்டு நடத்த புதிய சட்டம் கொண்டு வரவேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து அமைப்புகளின் பாரம்பரிய விளையாட்டு. ஜல்லிக்கட்டுக்கு சட்டச் சிக்கல் உள்ளது. எனவே வரும் பொங்கலுக்கு ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் அல்லது புதிய சட்டத்தை கொண்டுவரவேண்டும். இது தமிழகத்தின் பிரச்சினை மட்டும் இல்லை. கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதியிலும் இந்த பிரச்சினை உள்ளது. மேனகாகாந்தி தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு பேச வேண்டும்.

ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து கட்சிகளுடன் சேர்ந்து பா.ம.க. ஒத்துழைப்பு தரும். தமிழக முதல்-அமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.

கர்நாடக முதல்-அமைச்சர் காவிரியின் குறுக்கே அணை கட்டுவோம் என்று அதிகாரபூர்வமாக அறிவித்த பின்பும், தமிழக அரசு தூங்கிக்கொண்டு உள்ளது. அதிக அளவு நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள அ.தி.மு.க. இதுகுறித்து எதையும் பேசவில்லை.

ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதில் அரசியல் தலையீடு இல்லை என்றாலும், தேர்வு செய்யும் அதிகாரிகள் தகுதியானவர்களாக இல்லை. அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா ஒரு வெண்கலப் பதக்கம் கூட வாங்க முடியாதது வருத்தத்தை அளிக்கிறது. எனவே இதில் பிரதமர் தலையிட்டு தனி கவனம் செலுத்த வேண்டும்.

சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையாக மக்கள் பார்க்க வேண்டும். அப்போது தான் சட்டமன்றத்தில் ஆரோக்கியமான விவாதம் நடக்கும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.