மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது

357 0

201608180927268125_sadananda-gowda-interview-TN-does-not-impact-to-building-of_SECVPFமேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய மந்திரி சதானந்த கவுடா கூறினார்.

மதுரையில் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி சதானந்த கவுடா விமானம் மூலம் மதுரை வந்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-பிரதமர் மோடி உத்தரவின்பேரில் இளைய தலைமுறையினயிருக்கு சுதந்திரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த மதுரை வந்துள்ளேன். சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், காமராஜர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்த உள்ளேன்.

ஜல்லக்கட்டு தொடர்பாக மத்திய அரசு தனது நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவாக வெளிபடுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்தில் நீர்பாசனம் எந்தவகையிலும் பாதிக்காது. நீரை தேக்கி வைத்து மின்சாரம் தயாரிக்கவே அணை கட்டுப்படுகிறது.

மின்சாரம் உற்பத்தியானதும் மீண்டும் அந்த தண்ணீரை காவிரியில் இணைத்து விடுவோம். இதனால் தமிழகத்திற்கு கிடைக்கக்கூடிய நீர் எந்த வகையிலும் குறையாது. இவ்வாறு அவர் கூறினார்.