முல்லைத்தீவில் இடம்பெறும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தொடர் போராட்டம் இன்று 1 9 6 ஆவது நாளாக நடைபெறும் நிலையில் வடமாகான மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் சென்று உறவுகளுடன் கலந்துரையாடினார்.
முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கொட்டகை அமைத்து அங்கு தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களை வைத்து கடந்த மார்ச் 8 ம் திகதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று குறித்த கொட்டகைக்குச் சென்ற அமைச்சர் அனந்தி சசிதரன் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அவர்களின் உறவுகளுடன் கலந்துரையாடினார்.