கிழக்கு மாகாண வேலையில்லாப் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்ப்பதற்கான போட்டிப்பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி மாவட்டரீதியில் நடைபெறவுள்ளது.
இதற்கான அனுமதி அட்டைகள் பரீட்சார்த்திகளுக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
எனினும் இவ் அனுமதி அட்டைகள் உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமா பெற்ற வர்த்தகப்பட்டதாரிகளுக்கு அனுப்பிவைக்கப்படவில்லை. இவர்கள் கடந்தகால போராட்டத்தில் பூரணமாக ஈடுபட்டவர்கள். சுமார் 500பேர் கிழக்கில் உள்ளனர்.
தமக்கு ஆசிரியர் நியமனம் நிச்சயம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.
இதனை கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஏனையோரும் கருத்திற்கொள்ளவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட கல்முனையைச்சேர்ந்த வர்த்தகப்பட்டதாரி தமிழ்ச்செல்வி கருத்துரைக்கையில்:
தங்களுக்கு ஏன் அனுமதி அட்டைகள் அனுப்பப்படவில்லையென சம்பந்தப்பட்ட பரீட்சைப்பகுதியினரிடம் கேட்டபோது 1990.44 சுற்றுநிருபத்தின் பிரகாரம் இத்தகைய பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கமுடியாது என வேண்டாவெறுப்பாக சுருக்கமாகப் பதிலளித்துவிட்டு தொலைபேசியை வைக்கின்றார்கள்.
ஆனால் எமக்கு முன்னர் எம்போன்ற பட்டதாரிகள் கிழக்கில் ஆசிரியர்களாகவும் அதிபர்களாகவும் சேவையாற்றிவருகின்றனர். அதுமட்டுமல்ல. தென் மாகாணம் மற்றும் வடமத்திய மாகாணங்களில் எம்போன்றவர்கள் அரச தொழிலுக்கு இம்முறை கூட தெரிவாகி சேவையிலுள்ளனர்.
எம்மிடம் பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக்குழு வழங்கிய பட்டதாரி சான்றிதழும் இருக்கின்றது.இந்நிலையில் எமக்கு மட்டும் ஏனிந்த புறக்கணிப்பை கிழக்கு மாகாணசபை
முன்வைத்துள்ளது? நாம் அனைவரும் ஓரிரு நாட்களில் ஒன்றுசேர்ந்து மீண்டும் போராட்டம் நடத்த ஆலோசித் துவருகின் றோம் என்றார்.